உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த மரம் திபெத் அடர்வனத்தில் இருப்பதை சீன தாவரவியல் நிபுணர்கள் துல்லியமாக அளவிட்டு பதிவு செய்திருக்கின்றனர்.
தீபத்தில் சாயு மாவட்டத்தில் 250 அடிக்கு மேலே வளர்ந்த ஏராளமான மரங்கள் இருப்பதை தெரிந்த சீனாவின் பல்வேறு தாவரவியல் ஆய்வு நிறுவனங்கள் அவற்றை அளவிடும் கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அப்போது வெர்ஜின் பாரஸ்ட் பகுதியில் உள்ள Abies ernestil வகையைச் சார்ந்த மரம் ஒன்று 83.4 மீட்டர் அதாவது 273 அடி உயரம் வளர்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் வயது 350 வருடங்கள் என நிபுணர்கள் மதிப்பிட்டு இருக்கின்றனர்.
இதனை அடுத்து சீன வரலாற்றை முதன்முறையாக அதிக உயரமாக வளர்ந்து இருக்கும் மரத்தினை தாவரவியல் நிபுணர்கள் அளவீடு செய்து படம் பிடித்ததுடன் அதன் செல் மாதிரிகளை சேகரித்து பாதுகாத்து இருக்கின்றனர். அதிநவீன ட்ரோன்களின் உதவியுடன் மரத்தின் உயரத்தை அவர்கள் துல்லியமாக அளவிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த மரத்தின் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட பிற தாவர வகைகள் வளர்ந்து இருப்பதையும் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த பிரம்மாண்ட மரத்தின் பல்வேறு பகுதிகளை 160 படங்களாக பதிவு செய்து ஆய்வாளர்கள் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.