அண்மையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செலோஷோ (தி லாஸ்ட் ஷோ)என்ற திரைப்படத்தில் நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலி புற்றுநோயால் காலமானார்.குஜராத்தி மொழியிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சிறுவர்களில் ஒருவராக மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்துள்ளார். இவர் பல நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு திரை உலகிர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து.இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கத