வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார், அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். தனக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய இலவச சட்ட ஆலோசனை மையத்துக்கு வந்திருக்கிறார். இங்கும் அவருக்கு யாருமே உதவி பண்ணாத நிலையில், இலவச சட்ட ஆலோசனை மைய அலுவலகத்திற்கு முன்பாக அவர் தன்னைத்தானே ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார்.
தீ குளித்தவுடன் அங்கிருந்து காவல்துறையினர் அவருடைய உடைகளை கழற்றி, தீயை அனைத்து உள்ளார்கள். அதை தொடர்ந்து கேட்கும் போது, தனக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. நான் எல்லா இடத்துக்கும் சென்றும் கிடைக்காததால் எனக்கு வேற வழி தெரியல, நீதி வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு வந்தேன் என கூறினார்.
அவரை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஏறக்குறைய 35 சதவீதம் அளவுக்கு தீக்காயங்களை ஏற்பட்டுள்ளது என்பது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.