Categories
மாநில செய்திகள்

‘ராமேஸ்வரம்-மதுரை” முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கூடுதலாக ஒரு வாரத்திற்கு 3 முறை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது. இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 70 ரூபாயும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 55 ரூபாயும், பரமக்குடியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 45 ரூபாயும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேப்போன்று பேருந்தில் செல்வதற்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை கோட்டம் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் போன்றவையும், வாடிப்பட்டி பகுதியில் இருந்து டிராக்டர்கள் போன்றவையும் சரக்கு ரயில்கள் மூலமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மதுரை கோட்டத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 170 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தில் சரக்கு போக்குவரத்து ரயில் மூலம் 128.44 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த 6 மாதத்தில் சரக்கு போக்குவரத்து மூலமாக 32.38% வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 413 சரக்கு ரயில்கள் அனுப்பப்பட்ட நிலையில், 614 சரக்கு ரயில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்த அரையாண்டு காலத்தில் மட்டும் சரக்கு போக்குவரத்து மூலமாக 1766 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதம் அதிகம். மேலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நிர்ணயத்தை இலக்கை விட 38 சதவீதம் அதிகம்.

Categories

Tech |