Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#HardikPandya : 29ஆவது பிறந்தநாள்…. கேக் வெட்டி கொண்டாடிய ஹர்திக்…. கோலி, ராகுல் உட்பட பலரும் வாழ்த்து…!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் குஜராத்தில் அக்டோபர் 11, 1993 அன்று பிறந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சூழ்நிலை கடினமாக இருக்கும் போது பல சந்தர்ப்பங்களில் அணிக்கு உதவியுள்ளார். தேவைப்படும் நேரத்தில், சிக்ஸர் அடிக்கும் திறமை படைத்தவர்.

பாண்டியா 73 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், 66 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், 11 டெஸ்ட் போட்டிகளில் 17விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா ஒட்டுமொத்தமாக 150 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2,907 ரன்களும், 134 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.. தற்போது ஹர்திக் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் பாண்டியா. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி அணியை வழிநடத்தி குஜராத் அணிக்கு முதல்முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்தார், மேலும் தனது திறமையை உலகுக்குக் காட்டினார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11 ஆம் தேதி (இன்று) தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், எனவே இந்திய ஹார்ட் ஹிட்டரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளைப் பார்ப்போம்.

#குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது, 2008 இல் ஷேன் வார்னுக்குப் பிறகு ஒரு அணிக்கு  அதன் முதல் வருடத்தில் பட்டம் வாங்கி கொடுத்த முதல் கேப்டனாக ஹர்திக் மாறினார்.

#ஒரே டி20 போட்டியில் அரை சதம் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் ஹர்திக்.

# ஜூன் 2022 இல், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

# நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

#ஹர்திக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அடித்த ஒரே ஒரு சர்வதேச சதம் மட்டுமே உள்ளது

# ஹர்திக் ஒரு செர்பிய நடனக் கலைஞர், மாடல் மற்றும் நடிகை நடாசா ஸ்டான்கோவிக்கை 2020ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஜனவரி 2016 இல் இந்திய அணியில் அறிமுகமானார், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் பின்னர் அக்டோபரில் நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பதால், வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் சதம் அடிக்கும் வாய்ப்பு பாண்டியாவுக்கு கிடைக்கவில்லை.

தற்போது ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா அணியுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த போட்டோவில், இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் சுற்றி இருந்தனர்.

விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகிய இருவரும் பிறந்தநாள் ஹர்திக்குடன் விடுமுறையை அனுபவித்து இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். டெல்லியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், ‘ராக்ஸ்டார்’ ஹர்திக்கின் சிறப்பு நாளில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் உங்களைப் போல ஆக விரும்பும் பலருக்கு ஒரு தலைசிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவரது மனைவி நடாசா, சகோதரர் க்ருனால் பாண்டியா உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

 

Categories

Tech |