Categories
மாநில செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை…. பிரதமர் மோடி பங்கேற்பு?…. வெளியான தகவல்..!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த குருபூஜையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வர உள்ளதாகவும், 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், பிஜேபி வட்டாரங்களில் முக்கிய நிர்வாகிகள் இந்த தகவலை கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த குருபூஜை விழாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 28, 29, 30-ம் தேதிகளில் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடைபெறும் வழக்கம். இந்த ஆண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நேரில் வந்து மரியாதை செலுத்துவார் என்பதால் அவருக்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் மும்முரமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அதுக்கு முன்னதாக பிரதமர் வரக்கூடிய நிலை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், எந்த வழியில் வந்து எப்படி செல்ல வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த வருடம் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு மரியாதை செலுத்தக்கூடிய வகையில் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |