பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், திருப்பதியில் முன்பு நிறுத்தப்பட்ட அனைத்து விதமான பூஜைகள் மற்றும் பண்டிகைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள ஒரு மலை குன்றின் மேல் ஏழுமலையானின் உருவம் தெரிவதாக சில பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த மலைக்குன்றானது 3000 அடி உயரத்தில் இருக்கிறது. திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் இந்த மலை குன்றில் தெரியும் ஏழுமலையானின் உருவத்தை வணங்கிவிட்டு தான் செல்வார்கள். இந்நிலையில் சிலர் அதிக பக்தியின் காரணமாக அந்த மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள ஏழுமலையானின் உருவத்திற்கு பிரம்மாண்டமான ஒரு மாலையை அணிந்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.