திருப்பூர் அருகே வேகத்தடையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரது நண்பருமான மணி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நடுவுசேரியில் இருக்கும் பால் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நடுவு சேரியிலிருந்து அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
செல்லும் வழியில் வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் நிலை தடுமாறி கீழே விழ இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க மணி என்பவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.