டிரைக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகன் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிக் கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது இவர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் பெயருக்கான காரணம் குறித்து பேசியபோது, விஜய் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது படங்களின் கதாநாயகர்களுக்குகூட விஜய் என்ற பெயரை தான் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே வைப்பேன். என் அம்மா கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஜோசப் என்பதை அவர் வைக்க விருப்பப்பட்டார். அதேபோன்று என் மாமனாருக்கு விஜயவேல் என்ற பெயர் வைக்க வேண்டும் என ஆசை. அவர் இருந்தவரையிலும் நடிகர் விஜய்யை விஜய்வேல் என்றுதான் கூப்பிடுவார். நான் வட பழனி கோயிலில் வைத்துதான் ஜோசப் விஜய் என்ற பெயரை வைத்தேன். அதுவே நான் மத சார்பற்றவன் என்பதற்கு சாட்சி என கூறியிருக்கிறார்.
அத்துடன் நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது உண்மை தான். அதனை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒரு கட்டம்வரை தான் பிள்ளைகள் நம் பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டால் அவர்களது ஆட்டிடியூட் மாறி விடும். இது அனைத்து வீட்டிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்வதில்லை என்று விளக்கமளித்துள்ளார். அண்மையில் கூட சந்திரசேகர் மற்றும் ஷோபாவிற்கு நடந்த சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காதது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.