தமிழகத்தில் சிம் கார்டை 5g சேவைக்கு மாற்றுவதாக மோசடி நடைபெறுவதாக மக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் 5g சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பேசி சிம்கார்டை 5g சேவைக்கு மாற்றி தருவதாக மோசடி நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.சில சைபர் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி சிம் கார்டை 5G சேவை சிம்காடாக மாற்றி தருவதாக கூறுகின்றனர்.
இதனை மக்களும் நம்பி அந்த நபர்களிடம் பேசும் போது குறிப்பிட்ட இணையதள இணைப்பை அனுப்பி அதில் ரகசிய தகவல்களை பதிவிட வைத்து கைபேசியில் இருக்கும் அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது. அதே சமயம் ஓடிபி பெறப்பட்டு அதன் மூலம் பணம் பரிமாற்ற செயலிகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றில் இருக்கும் பணத்தை நூதன முறையில் திருடுகின்றனர்.எனவே இது போன்ற அழைப்புகள் வந்தால் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.