தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகமான நயன்தாரா 17 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு நயன்-விக்கி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாகவே புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று நயன்-விக்கிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை விக்கி தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். அதோடு குழந்தைகளின் கால்களுக்கு நயன் மற்றும் விக்கி முத்தம் கொடுக்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நயன்-விக்கி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு பக்கம் வாழ்த்துக்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் நயன்-விக்கி இரட்டை குழந்தை பெற்றது ஒரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
அதாவது மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதித்த நிலையில், மருத்துவ ரீதியாக பிரச்சனைகள் இருந்தால் திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆன பிறகுதான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் ஆகி 4 மாதங்களில் நயன்-விக்கிக்கு குழந்தை பிறந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாடகை தாயின் மூலமாக குழந்தை பிறந்தாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவரீதியாக தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனவரி மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இதை பற்றிய நிறைய தகவல்களை கேள்விபடுவோம் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் மறைமுக மிரட்டலா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.