தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தற்போது இரட்டை குழந்தை பெற்றதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் வாடகைத்தாய் முறையை கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. ஒருவேளை கணவன்-மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன பிறகு தான் வாடகை தாய்முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் மத்திய அரசு ஜனவரி மாதம் தடையை விதித்த பிறகு தான் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆகியுள்ளது. இதனால் சட்டரீதியான பல்வேறு பிரச்சனைகளை நயனும்-விக்கியும் சந்திக்க நேரிடுமா என்ற கேள்வி தான் தற்போது பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட முக்கியமான பிரபலங்கள் குறித்த தகவலை பார்க்கலாம். அதாவது பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் தம்பதி கடந்த 2011-ம் ஆண்டு வாடகை தாய் மூலம் ஆஷாத் ராவ் கான் என்ற மகனை பெற்றெடுத்தனர். இவர்கள்தான் வாடகை தாய்முறையை திரையுலகில் அறிமுகப்படுத்தினர் என்றே கூறலாம்.
அதன்பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் கவுரி கான் தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு வாடகை தாய் மூலம் அப்ரான் கான் என்ற மகனை பெற்றெடுத்தனர். இதனையடுத்து பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மற்றும் டேனியல் வைபர் தம்பதி வாடகை தாய் மூலம் ஆஷர், நோவா என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதைத்தொடர்ந்து பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதி கடந்த 2020-ம் ஆண்டு சமிஷா என்ற பெண் குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றடுத்தனர்.
மேலும் பிரபல நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2021-ம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையும், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைத்தாய் மூலம் மல்டி மேரி என்ற பெண் குழந்தையையும் வாடகைத்தாய் மூலமாக பெற்றெடுத்துள்ளனர்.