Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல‌ நடிகை….. காரணம் என்ன….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

பாலிவுட் சினிமாவில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நுபுர் அலங்கார். இவர் மக்களை மிகவும் கவர்ந்த சக்திமான் என்ற தொடரில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 27 வருடங்களாக சினிமாவில் நடித்து வந்த நுபுர் அலங்கார் பிரபல நடிகர் அலங்கார் ஸ்ரீவத்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 49 வயதாகும் நுபுர் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார். அதன் பிறகுசினிமாவில் இனி  நடிக்க மாட்டேன் எனவும், இப்போது தான் வாழ்க்கையில் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன் எனவும் நுபுர் கூறினார்.

இதனையடுத்து தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை நுபுர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது பிச்சை எடுக்கும் வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் என் குருவின் ஆலோசனைப்படி தெருக்களில் பிச்சை எடுக்க தொடங்கினேன்.

நான் நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுப்பதால் சிறிது பணம் கிடைக்கிறது. தற்போது தான் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவரிடம் பிச்சை எடுக்கும் ஒரு போட்டோவையும், தான் பிச்சை எடுக்கும் கிண்ணத்தின் போட்டோவையும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ மற்றும் புகைப்படத்தை பார்த்து நுபுர் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nupur Alankaar (@nupuralankar)

Categories

Tech |