Saturday is coming…. Santhanam’s first song…. Trending video on internet…!!!!தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குளுகுளு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சந்தானம் கிக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தயாரிக்க, தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
@iamnaveenraaj @Fortune_films #ProductionNo10 @johnsoncinepro @saregamasouth
— Santhanam (@iamsanthanam) October 10, 2022
இப்படத்தை ஃபார் டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் ராஜ் தயாரிக்க, அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்நிலையில் சந்தானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. மேலும் சாட்டர்டே இஸ் கம்மிங்கு என ஆரம்பிக்கும் சந்தானம் திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.