இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோட டோனி என்டர்டைன்மெண்ட் என்றால் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தோனி தற்போது படங்கள் தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரோர் ஆஃப் தி லயன், இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம், புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் படம் போன்றவற்றை தயாரித்துள்ளார். மேலும் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் படத்தை டோனி தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் டோனி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.