Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் வாடைக்கைதாய் விவகாரம்…. சர்ச்சையை ஏற்படுத்திய…. நடிகை கஸ்தூரி டுவிட் பதிவு…!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டரில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டள்ளார். இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |