காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிறுவர்-சிறுமிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள்.