Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் அதனை புகார் செய்வதற்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 18004256151 என்ற எண்ணிலோ அல்லது 044-24749002 என்ற எண்ணிலோ அல்லது 0442628044 என்ற எண்ணிலோ அவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |