மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறலாம் என மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதிப் போட்டி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் புதியவர் என்பதால், ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது மிகவும் கடினமாக இருக்கும் என்றார். மேலும் வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி எந்த அணிக்கு எதிராகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும் என்று யுனிவர்ஸ் பாஸ் கூறியுள்ளார்.
“ஆம், அவர், மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் திறமையானவர்கள் மற்றும் எந்த அணிக்கும் ஆபத்தானவர்கள் என்பதை நிரூபிக்க முடியும் என்பது நிச்சயம். போட்டி நாளில் உங்களின் உத்தியை சரியான முறையில் மாற்றியமைப்பது அனைவருக்கும் தெரியும். நான் அணி நன்றாக விளையாடும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவில் அக்., 16ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன, அதில் 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த அணிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும். ஏனெனில் இந்த 8 அணிகளும் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.. ஆனால் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உட்பட 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடி முதல் 4 இடங்களை பிடிக்கும் பட்சத்தில் சூப்பர் 12 க்கு செல்லும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலககோப்பையின் முதல் சுற்று போட்டியில் 17ஆம் தேதி ஸ்காட்லாந்து அணியையும், 19ஆம் தேதி ஜிம்பாப்வே அணியையும், 21 ஆம் தேதி அயர்லாந்து அணியையும் எதிர்கொள்கிறது.. சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரை விளையாடியது, ஆனால் முடிவில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 உலககோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி:
நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்கோய்,
ரேமன் ரெய்ஃபர், ஒடியன் ஸ்மித், ஷமர் ப்ரூக்ஸ்.