மீண்டும் ரஷியா தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து போரிட்டு உக்ரைனின் முக்கியமான 4 நகரங்களை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஷியாவையும், கிரீமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டு வெடிப்பு நடந்தது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் கூறியதாவது. தொடர்ந்து எங்கள் நாட்டின் மீது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து ரஷியா 75 ஏவுகணைகளை ஏவி வீசியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.