உலக நடைப்பயிற்சி தினத்தையொட்டி ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட சிலம்பர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாவட்ட சிலம்ப சங்கத்தின் தலைவர் நாகராஜ் அவர்கள் ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் சிலம்பத்தை சுற்றியபடி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அசோகா சர்க்கிள் அருகில் முடிவடைந்துள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் சிறுவர்கள், சிறுமிகள் அவர்களுடைய பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.