ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து சில பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று எச்சரித்த அதிகாரிகள், இதனை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். அம்மாநிலத்தில் இறைச்சிக்காக கழுதைகளை கொல்லும் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதாவது கழுதை இறைச்சியை உண்டால் வலிமையும், வீரியமும் கிடைக்கும் எனும் நம்பிக்கையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.