அமெரிக்காவின் உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெலோட்டன் (Peloton) 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. செலவினத்தை குறைக்கும் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக்கார்த்தி அறிக்கை வெளியிட்டார்.
மேலும் அவர் “எங்கள் சகாக்கள் 500 பேர் நிறுவனத்திற்காக செய்த நன்றியை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி உடற் பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறது என்பதும் ஏற்கனவே 3 கட்டமாக செலவை குறைக்கும் அடிப்படையில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.