Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பயிற்சி போட்டியில் சூர்யகுமார் அதிரடி….. மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!!

டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது..

ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கு பெற்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். அதேசமயம் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடும். அந்த முதல் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதற்கிடையே ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 4 பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி மேற்கு ஆஸ்திரேலியாவுடன் 2 போட்டிகளிலும், அக்., 17ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும், 19ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும். காபா மைதானத்தில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இன்று மேற்கு ஆஸ்திரேலியா உடன் முதல் பயிற்சி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 மற்றும் ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 22 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.. இருப்பினும் மிடில் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஹர்திக் பாண்டியா 27 ரன்களும், அக்சர் பட்டேல் 10 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.. கடைசியில் தினேஷ் கார்த்திக் 19, ஹர்ஷல் படேல் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கு ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக சாம் ஃபேன்னிங் 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். மேலும் கேமரூன் பான்கிராஃப்ட் 22 ரன்கள் எடுத்தார்.. மற்றவர்களை அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் யூசுவேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Categories

Tech |