பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது.
சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் விழுந்த சுரங்கப் பாதை சாலையை சரிசெய்ய இன்னும் சில தினங்கள் ஆகும். வருடாந்திர பராமரிப்பு மற்றும் குறைபாடு பொறுப்புபிரிவின் கீழ் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட பாதிப்பினை ஒப்பந்ததாரர் இலவசமாக சீர்செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.