Categories
உலக செய்திகள்

“எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” ஏவுகணை சோதனையில் தீவிரமடைந்துள்ள வடகொரியா…. வெளியான தகவல்….!!!!

எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா  தெரிவித்துள்ளது

வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக  கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது.  கடந்த சில நாட்களாக வடகொரியா  அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளத.

இந்த நிலையில் 7 முறை ஏவி பரிசோதனை நடத்தப்பட்ட அணு ஆயுத பயிற்சி உண்மையான போர்திறன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, எந்த நேரத்தில் நிறுவப்பட்டிருந்தாலும் அதை தாக்கி அளித்து துடைத்தெரியும் அணு ஆயுத வல்லமை கொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளதாக வரக்கூடிய தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. வடகிழக்கு பகுதியில் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் அந்நாட்டை அழிக்க உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த அணு ஆயுதங்களை சுமந்து சென்று ஏவுகணை ஜப்பான் வான் பரப்பு மேல் பறந்து சென்று நிலத்திலிருந்து ஏவப்பட்ட நிலத்தின் மேல் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுதலை  அதிபர் கிம் பார்வையிட்டார் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |