இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம்-1 கடந்த 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் திரையுலகில் இதுவரையிலும் அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் 4வது இடத்தில் பொன்னியின் செல்வன் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் நடைபெற்ற காட்சியில் இன்னர்வீல் கிளப் சார்பாக நந்தினி, பழுவேட்டரையர், குந்தவை, வந்தியதேவன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகிய கதாபாத்திரங்கள் போல் வேடம் அடைந்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.