Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தீபாவளியை முன்னிட்டு 10,518 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவை சென்னை, மாதவரம், கேகே நகர், தாம்பரம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது மேலும் சென்னையில் இருந்து மூன்று நாட்களும் சேர்த்து 10,518 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6370 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி முடிந்த பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு அக்டோபர் 24 முதல் 26 வரை தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3,062 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது ஒட்டுமொத்தமாக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகள் சிறப்பான முறையில் இயக்கப்படுவதற்கு அனைத்து தரப்பு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நடப்பாண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது இந்த முறை திங்கட்கிழமை தீபாவளி வருவதனால் வெள்ளிக்கிழமை இரவே சொந்த ஊர் செல்வதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து தான் அதிகப்படியானோர் சொந்த ஊர் சென்று பண்டிகை கொண்டாட விரும்புவார். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும் பேருந்துகள் கிடைக்காமல் கூட்ட நெரிசலில் தவிக்கும் நிலை ஏற்படும் இதனை தடுப்பதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கும் மீண்டும் சென்னை திருப்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |