Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய படகு…. 76 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அந்நாட்ட அதிபர் முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற படகு விபத்து எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்யும்படி துறை அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |