பானிபூரி வியாபாரியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங்(39) என்பவர் வேலை தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் ரோட்டரி நகர் ஏழாவது பிரதான சாலை ஓரமாக தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆ ம் தேதி ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தட்டி கேட்ட அமர்சிங்கை அந்த வாலிபர் கற்களை கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமர்சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அமர்சிங்கை கொலை செய்த குற்றத்திற்காக விக்னேஷ்(26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.