Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது.

மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று உக்குறியானே நாட்டின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜாபோரிஜியா நகரத்தில் நள்ளிரவு நேரத்தில் ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர்.

மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் மிக உயர்ந்த அடுக்குமாடி கட்டிடம் மொத்தமாக இடிந்து தரைமட்டமானது. 50-க்கும் அதிகமான குடியிருப்பு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. இந்த கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |