உலக வரலாற்றில் இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களில் பிங்க் நிற வைரம் தான் மிகவும் விலை உயர்ந்தது . ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் 11.15 கேரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. அவர் உண்மையான மதிப்பு 21 மில்லியன் டாலர் என்ற நிலையில் ஏலம் விடப்பட்டதில் 49.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.கடந்த 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபத்திற்கு 23.60 கேரட் வில்லியம்சன் பிங்க் நிற வைரம் திருமண பரிசாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஹாங்காங் ஏலத்தில் 59.60 கேரட் பிங்க் நிற வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி மிகப்பெரிய சாதனை படைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 519 கோடியாகும். உலக அளவில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட வைரங்களில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது. தற்போது 11.15 கேரட் பிங்க் நிற வைரக்கல் 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏலத்தில் அதிக மதிப்பில் விற்பனையான வைரங்களில் இது இரண்டாவது இடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.