இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலில் மூன்றாவது அடுக்கு மாடியில் இன்று ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உட்பட மற்ற தளங்களில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுக்கள் வருவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து முதல் தளம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள மேல்பகுதிகளுக்கு தீ வேகமாக பரவி வருவதால் தீயின் தீவிரம் அதிகரிப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.