திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா நடித்த தெலுங்கு படம் ஒன்றில் ஜூனியர் என்.டி.ஆர் பேசிய வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்டிஆர், “மச்ச சாஸ்திரத்தின்படி உனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும்” என கூறியிருப்பார். இதையடுத்து நயன்தாராவின் குழந்தைகளை அன்றே கணித்த என்.டி.ஆர் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.