16 வயது சிறுமியை கடத்தி சென்ற பள்ளி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ஆ ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் எங்களது மகளை அவருடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். அதன்படி போலீசார் மாணவனையும், மாணவியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.