Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ செலவை குறைக்கும் செம்பருத்தியின் அதிசயம்..!!

செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்..

சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு  ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல தேவையே இருக்காது. பொதுவாக அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு , சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது.

இந்த கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகரித்து ரத்த அழுத்தம் கூடி நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கி விடுகின்றன. எனவே உடல் மற்றும் மனம் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தி மனதிற்கு அமைதியை தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.

அதாவது செம்பருத்தி பூக்களில் உள்ள காசிபால் என்னும் சத்து கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துகின்றன.

உஷ்ணம் குறைய:

செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம் 100 கிராம். நெல்லி வற்றல் ஒரு கிராம், ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும்.

அம்மை மற்றும் ஆக்கி நோய்:

வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் காலை எழுந்ததும் 5 முதல் 6 செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு சிறிது நீர் அருந்தி வந்தால் உடனே குணமாகும்.

முடிவளர:

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து, வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைக்கவேண்டும். இதை தினமும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நீங்கி, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

பொடுகு நீங்க:

பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை சுத்தமாக இருக்காது. மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் கடுமையான வெட்டை நோய் உள்ளவர்கள் செம்பருத்தி பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதே போல் தொடர்ந்து நாற்பது நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை இருந்தாலும் முற்றிலும் குணமாகிவிடும்.

இருதய நோயாளிகள்:

செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் இரண்டையும் கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும். இவ்வளவு மருத்துவ குணம் வாய்ந்த செம்பருத்தியை தினமும் சாப்பிட்டு நோய் இல்லாமல் வாழுங்கள்..

 

Categories

Tech |