உக்ரைன் மீதான போர் எட்டு மாதங்களைக் கடந்துள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் பெரும்பாலான பகுதிகளில் பின் வாங்க தொடங்கியிருக்கும் இந்த வேலையில் கிருமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் “THE KERCH” பாலத்தை உக்ரைன் தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் ரஷ்ய படையினருக்கு தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உக்ரைன் தாக்குதல் நடத்தி பாலத்தை தகர்த்ததில் குறைந்தது மூன்று பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் ஸ்டேட் டுமாவின் துணைத்தலைவர் கூறியதாவது “இது விதிகள் இல்லாத போர் அறிவிப்பு என்று மேற்கோள்காட்டி “பாலத்தின் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனமும் எங்களுக்கு எதிராக ஒரு மறக்கப்படாத பயங்கரவாத போர் நடத்தப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.