திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா ஆகி விட்டோம்” என குறிப்பிட்டு இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.