குஜராத்தில் கேடா மாவட்டத்திலுள்ள உந்தியலா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல் வீசியதாக போலீசார் சிலரை தாக்கினார்கள். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ஓவைசி கூறியது, நாட்டில் பாஜக ஆட்சி முஸ்லிம்கள் திறந்த சிறையில் தான் இருக்கிறோம். தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை.
பிரதமர் மோடி குஜராத் சம்பவத்தை அறிந்த பிறகும் அமைதியாக இருக்கிறார். இது உங்கள் சொந்த மாநிலம் தானே. உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுகின்றனர். சுற்றி நிற்கும் கூட்டம் விசில் அடித்து உற்சாகம் கொள்கிறது. தயவு செய்து கோர்ட் காவல்துறையை கலைத்து விடுங்கள் என்று காட்டத்தை தெரிவித்துள்ளார்.