ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார்.
அவரின் கணவர் சுனாமியில் உயிர் பிழைத்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக தன் மனைவியின் உடல் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு 65 வயதாகிறது. வாரந்தோறும் மனைவியின் உடலை தேடுவதற்காக கடலில் டைவிங் செய்து கொண்டிருக்கிறார்.
இது பற்றி அவர் தெரிவித்ததாவது, சுனாமிக்கு பின் என் மனைவியின் செல்போனும் மற்ற உடமைகளும் கிடைத்து விட்டது. அவரிடமிருந்து இறுதியாக ஒரு தகவல் கிடைத்தது. எனினும் தற்போது வரை அவரின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. என் உயிர் இருக்கும் வரை அவளை தேடுவேன் என்று கூறியிருக்கிறார்.