Categories
சினிமா தமிழ் சினிமா

விருமன் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகர்… போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்…!!!!!

ஆர்யா ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் வருடம் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூலமாக பரிசயமான நடிகராகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலமாக அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். மேலும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக போஸ்டர் வெளியிட்டிருக்கின்றனர்.

Categories

Tech |