உலகளவில் பலரும் மெயில் அனுப்புவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜிமெயிலை அலுவலக தேவைக்கும், சொந்த தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஜிமெயிலை அதிக அளவில் பயன்படுத்தும் போது மெசேஜ்கள் குவிந்த வண்ணமாக இருப்பதால் ஜிமெயில் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜ் டெலிட் செய்யும் போது உங்களுக்கு தேவையான மெசேஜ் கூட சில சமயங்களில் அழிந்துவிடும். இந்நிலையில் ஜிமெயிலில் உங்களுக்கு தேவை இல்லாத மெசேஜ் எப்படி டெலிட் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி கணினியில் ஜிமெயில் மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜிமெயிலை ஓபன் செய்து விட்டு இடதுபுறத்தில் காணப்படும் சிறுகட்டத்தை கிளிக் செய்து விட்டு, உங்களுக்கு தேவை இல்லாத மெசேஜ்களை மட்டும் செலக்ட் செய்து விட்டு டெலிட் பட்டனை கிளிக் செய்தால் தேவையில்லாத மெசேஜ்கள் அழிந்து விடும். இதனையடுத்து ஜிமெயிலில் நீங்கள் படித்த மற்றும் தேவையில்லாத மெசேஜ்களை நீக்க வேண்டும் என்றால் முதலில் கணினியில் ஜிமெயிலை ஓபன் செய்துவிட்டு சர்ச் பாக்ஸில் படித்த மெசேஜ்களை காட்ட label lead எனவும், படிக்காத மெசேஜ்களை காட்ட label unread எனவும் டைப் செய்து விட்டு என்டர் ஆப்ஷனை கிளிக் செய்தால், மின்னஞ்சல்களுக்கு மேல் புறத்தில் search all box என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு all 50 conversations On this page on selected. Select all conversations that match this search என்ற ஆப்ஷன் காட்டும். இதில் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய மெசேஜை மட்டும் தேர்வு செய்து டெலிட் ஆப்ஷனை கிளிக் செய்தால் தேவையில்லாத மெசேஜ்கள் அழிந்துவிடும். மேலும் ஜிமெயிலில் குறிப்பிட்ட ஒரு நபரின் மெசேஜ்களை மட்டும் டெலிட் செய்ய வேண்டும் என்றால், கணினியில் ஜிமெயிலை ஓபன் செய்து விட்டு சர்ச் பாக்ஸில் நீங்கள் அழிக்க விரும்பும் நபரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து விட்டு, செய்திகளின் மேல் பக்கத்தில் தோன்றும் செலக்ட் ஆல் பாக்ஸ் ஆப்சனை கிளிக் செய்து விட்டு, தேவையான மெசேஜ்களை தேர்வு செய்து டெலிட் ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் அழிக்க நினைக்கும் மெசேஜ்கள் மட்டும் அழிந்து விடும்.