Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் பட டிரைலர் இன்று வெளியீடு… பிரதமர் மோடி வாழ்த்து…!!!!!

கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் தனது 46 வது வயதில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவான கந்தாட குடி திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து கொள்ள விரும்பினார் என புனித் ராஜ்குமாரின் மனைவி புனித் ராஜ்குமார் twitter பதிவில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் புனித் ராஜ்குமார் இருக்கும் புகைப்படங்களை அவரது மனைவி வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் கந்தாடக்குடி திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு(புனித் ராஜ்குமார்) வாழ்ந்து வருகிறார். அவரின் புத்திசாலித்தனமான ஆளுமை ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கந்தா குடி என்பது இயற்கை அன்னைக்கும் கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |