Categories
மாநில செய்திகள்

BJPயில் சில பேர்…! அப்படி செய்வாங்க… 10 நாள் வியாபாரம் போயிரும்… இஸ்லாமிய கூட்டமைப்பு வேதனை..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் கோவை காவல் ஆணையரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, தொடர்ச்சியாக நாங்கள் காவல் ஆணையர் தொடர்பில் தான் இருக்கிறோம். பந்த் அறிவித்துள்ள பாஜகவினரை அழைத்துப் பேசி அவர்கள் அமைதிப்படுத்துகிறார்களா ?  அல்லது நடவடிக்கையின் வாயிலாக அமைதிப்படுத்துறாங்கலாங்களா ? காவல்துறை தான் முடிவு பண்ணும்.

நீதிமன்றத்திற்கும் பந்த் அறிவிக்க கூடாதுனு கோர்ட் போயிருக்கிறதாக சொன்னாங்க. எங்களுக்கு காவல்துறையின் மேல் முழுமையான நம்பிக்கை இருக்கு. பந்த் அறிவிக்காமா…  இதை ஒரு மதக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல்…  வியாபாரிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பாக பாருங்கள் அப்படின்னு தான் நாங்க சொல்றோம். ஏனெனில் மூன்றாண்டு காலமாக கொரோனா காலத்தினால் எந்த கடைகளிலும் வியாபாரம் இல்லாமல், அனைத்தும் முடங்கி போய், இப்பொழுது தான் திரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இப்ப ஒரு பந்த் அறிவித்து ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகினாள் பத்து நாள் வியாபாரம் போய்விடும். ஒரு நாளில் முடியப்போவதில்லை. இதிலும்  நியாயமான பந்த் நடத்தணும்னு இருக்கறவங்க இருக்காங்க,  இதை வைத்து வன்முறையும் செய்யலாம் என்று நினைக்க கூடிய பிஜேபியை சேர்ந்தவுங்க, சங்பரிவார் கும்பலை சேர்ந்தவுங்க  ஒரு சில பேர் எதாவது சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்றால், அது தொடர்ச்சியா போயிடும்ற கவலையும் எங்களுக்கு இருக்கு என வேதனை தெரிவித்தனர்.

Categories

Tech |