Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! அது மனுஸ்மிருதி இல்ல… ஆங்கிலேயர் எழுதிய நூல்… TVவிவாதத்தில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார்.

அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் ஜோன்ஸ் என்கின்ற ஆங்கிலேயானால் எழுதப்பட்ட புத்தகம், அதற்கும் மனுஷ்மிருதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தற்போது அதை வென்றே டோனிகள் என்கின்ற ஒரு அமெரிக்க பெண்மணி எழுதியதை நீங்கள் எரித்து இருக்கிறீர்கள் என்று நாம் சொன்னபோதெல்லாம்,

சிரித்தவர்கள் இன்றைக்கு சொல்கிறார்கள், இந்த புத்தகம் எல்லாம் நான் பங்கு கொண்ட டைம் ஷோ என்கின்ற தொலைக்காட்சியில்…  திராவிட கழகத்தினுடைய அருள்மொழி அவர்கள் அவரே ஒப்புக்கொண்டார்..  ஆமாம்..! அது சர் வில்லியம் ஜான்ஸ் எழுதிய புத்தகம் தான் என்று…  இது நியாயமா? இப்படித்தான் அரசியல் செய்வார்களா? நாங்கள் பலகாலமாக எங்களுடைய ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து நாம் சொல்லி வருகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |