செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன்.
ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை அவர் கட்சியிலே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. தேசிய தலைமைல கவனிக்கு. அவரு நிறைய விஷயங்கள் சரியாக, எடுத்து சொல்றாரு. ஆனால் இந்த மாதிரி கோவப்படுகிறார்.
நீங்க எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும், குறிப்பாக ஆளுங்கட்சி தலைவர்களை… நீங்கள் கேட்கிற கேள்வி, மக்களின் மனதில் உள்ளது தானே கேக்குறீங்க. எனவே பொறுமையா பதில் சொல்லணும் என தெரிவித்தார்.