கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் கோவை காவல் ஆணையரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது,கடந்த 23ஆம் தேதி கோவையில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்தும் விரிவாக எதிர் வரக்கூடிய காலங்களில் அமைதிப்படுத்துவதற்காக கோவையில் இருக்கக்கூடிய மத பதட்டத்தை அமைதிப்படுத்துவதற்காக இஸ்லாமிய சமூக மக்கள் மத்தியில் என்னென்ன ஒத்துழைப்புகள் காவல்துறை எதிர்பார்க்கிறார்கள், நாங்கள் என்னென்ன ஆலோசனைகள் சொல்லனுமோ, அதையெல்லாம் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசி கொண்டிருக்கிறோம். அதன் முழு விவரங்கள் பத்திரிகை அறிக்கையின் வாயிலாக நாங்கள் உங்களுக்கு நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
காவல் ஆணையர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூக மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த அமைதியை நிலைநாட்டுவதற்காக எல்லா விஷயங்களிலும் தொடர்பில் இருக்கிறார்கள். பல விஷயங்கள் நேரடியாக நாங்கள் சந்திக்கவில்லை என்று சொன்னாலும், எல்லா வகையிலும் அவர் தொடர்பில் இருக்கிறார். 31ஆம் தேதி பந்த் அறிவித்த உடனே ஒரு பதட்டமான சூழல் திரும்ப வருது, அதை எப்படி பேஸ் பண்றீங்க ? நாங்க எப்படி ஒத்துழைப்பு கொடுக்கணும் அப்படிங்கறதுக்காக நாங்க தான் அவரை சந்திக்க வந்திருக்கிறோம் என தெரிவித்தனர்.