மனிதர்கள் மட்டும்தான் அவர்களது நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் விலங்குகளும் அதன் ஜோடிகளுடன் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்களும் நல்ல நண்பர்கள்தான் என்பதை உணர்த்தும் அடிப்படையில் ஒரு வீடியோ டுவிட்டரில் யோக் என்ற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் பழுப்பு நிறம் மற்றும் கருப்புநிறத்தில் உள்ள 2 நாய்கள் வெளியில் சென்றுள்ளது.
https://twitter.com/Yoda4ever/status/1577847462139600897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577847462139600897%7Ctwgr%5Ee722f0468c4542065df5d4ae4ff4f698678fa52e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fdog-couples-enjoying-vacation-video-goes-viral-google-trends-413973
இதையடுத்து ஒரு காட்டுப் பகுதியில் மனிதர்கள் போல அழகாக ஊஞ்சல் ஒன்றை கட்டி அதில் அந்த 2 நாய்களும் படுத்துக் கொண்டு சொகுசாக ஆடிக்கொண்டு இருக்கிறது. அமைதியான காட்டுப் பகுதி மற்றும் நீர்சூழ்ந்த அப்பகுதியில் அந்த 2 நாய்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த 2 நாயின் வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலருக்கும் தங்களது நபர்களுடன் இப்படி ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரையிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.