நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11 வது தவணை படம் வழங்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாவது தவணைத் தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பயனாளிகளின் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
அதில் உள்ள Farmers Corner பகுதிக்கு செல்லவும்.
அதில் Beneficiaries List கிளிக் செய்யவும்.
மாநிலம், மாவட்டம், தாலுக்கா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
Get Report கிளிக் செய்யவும்.