Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட பெற்றோர்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ நெடும்பூர் பிள்ளை தெருவில் மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்தார். இதனை அறிந்த பெற்றோர் ஆனந்தியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |